காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண திட்டமிட்டு வரும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் இம்ரான் கான் அரசு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை சுதந்திர பெற்றது முதல் தற்போது வரை நீடித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீர் பகுதியை கைப்பற்ற இந்திய, பாகிஸ்தான் இருநாடுகளும் போட்டி போட்டு கொண்டிருக்கிறது.
காஷ்மீர் நிலைத்தை வைத்து தற்போது இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனைகள் நிலவி கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வு காண இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் முயன்றும் இயலவில்லை.
பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இம்ரான் கான் அரசு தற்போது பாகிஸ்தான் பிரச்சனைக்கு தீர்வு காண திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.