இந்தியாவின் முதல் எல்.இ.டி. ஸ்க்ரீன் தியேட்டர் எங்கு தெரியுமா?
தற்போது உலகம் முழுவதும் எல்.இ.டி தொலைக்காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வகை தொலைக்காட்சியில் படம் பார்ப்பதே ஒரு தனி அனுபவமாக உள்ளது. இந்த நிலையில் திரையரங்குகளிலும் அடுத்த பரிணாமமாக எல்.இ.டி ஸ்க்ரீன்கள் வரவுள்ளது.
இந்தியாவின் முதல் எல்.இ.டி ஸ்க்ரீன் டெல்லியில் உள்ள ஒரு திரையரங்க வளாகத்தில் வரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிவிஆர் நிறுவனம் கட்டி வரும் புதிய திரையரங்குகளில் ஒன்றான ஒய்னெக்ஸ் என்ற திரையரங்கில்தால் எல்.இ.டி ஸ்க்ரீன் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக சாம்சங் நிறுவனத்திடம் பிவிஆர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
சமீபத்தில் சத்யம் திரையரங்கை ரூ.800 கோடி கொடுத்து கைப்பற்றிய பிவிஆர் நிறுவனம் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1000 ஸ்க்ரீன்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் டெல்லியை அடுத்து சென்னை உள்பட முக்கிய நகரங்களிலும் மிக விரைவில் எல்.இ.டி ஸ்க்ரீனை கொண்ட வர பி.வி.ஆர். திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது