திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (07:02 IST)

பாபர் ஆசாம் டி 20 பார்மெட்டுக்கு தகுதியானவர் இல்லை… சேவாக் தடாலடி கருத்து!

நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றது. மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடமும் தோற்றது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த படுதோல்விக்கு பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையே காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் பாபர் ஆசாமின் கேப்டன்சியும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு சற்று முன்பாக அவர் திடீரென மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டது சர்ச்சைகளை எழுப்பியது.

இந்நிலையில் பாபர் ஆசாம் குறித்து பேசியுள்ள சேவாக் “ஒரு கேப்டனாக ஒரு போட்டி அணிக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் தன்னை கீழிறக்கிக் கொண்டு வேறொருவரை அனுப்ப வேண்டும். யாரால் 6 ஓவர்களில் 50 ரன்கள் சேர்க்க முடியுமோ அவரை அனுப்ப வேண்டும்.

நான் சொல்வது கடினமானதாக இருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாறினால் பாபர் ஆசாமுக்கு டி 20 அணியில் இடம் இல்லை. அவரின் ஆட்டத்திறன் தற்போதைய டி 20 போட்டிகளின் அளவுகோலுக்கு ஈடாக இல்லை” எனக் கூறியுள்ளார்.