1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sarah Taylor quits international cricket due to problems

கிரிக்கெட் வாரியத்துடன் மோதல்; கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்ட வீராங்கணை!

சாரா டெய்லர்
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த சாரா டெய்லர் தனது ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 
 
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானவர் சாரா டெய்லர். இவர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 டி20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.  
 
சமீபத்தில் இவர் ஆடை இல்லாமல் நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலானார். இந்நிலையில் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார். 
 
ஆம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த சாரா தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உடல்நல குறைவு காரணமாக அவர் ஓய்வை அறிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ரிஷப் பண்ட் வெளியே… சாஹா உள்ளே – இந்திய அணி எடுத்த சில அதிரடி முடிவுகள் !