ஆடை கழன்ற போதும்... பக்கா ஃபீல்டிங் செய்த வீரர் - வைரல் வீடியோ

cricket
sinoj kiyan| Last Updated: திங்கள், 30 செப்டம்பர் 2019 (19:04 IST)
ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும்  உள்ளூர் போட்டி ஒன்றில் ஒரு வீரர் ஃபீல்டிங் செய்யும்போது, உடை கழன்றது கூட கவலைப் படாமல்   ஃபீல்டிங் செய்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது உள்ளூர் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குயின்லாண்ட் - விக்டோரியா ஆகிய அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, விக்டோரிய வீரர் ஒருவர் பந்தை அடித்து விட்டு, ஒரு ரன் எடுக்க ஓடினார்.
 
பந்து வருவதைப் பார்த்த குயின்லாண்ட்ஸ் அணி வீரர் மார்னஸ் ஓடிச் சென்று,   பந்தைத் தடுத்தார். அப்போது, அவரது அணிந்திருந்த பேண்ட் கழன்றது. ஆனால், அதை உடனடியாக சரி செய்யாமல் பந்தை எடுத்து வீசு பேட்ஸ் மேனை அவுட் செய்தார்.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.அத்துடன்  மார்னஸை எல் லோரும் பாராட்டி வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :