1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rumours Sakshi Dhoni tweets as speculation on MS Dhoni retirement grows

தோனி ஒய்வு உண்மையா? தகவல் கொடுத்த முக்கிய சிலர்!

தோனி
தோனி ஓய்வு குறித்து வெளியான செய்திகள் வெறும் வதந்தி என இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். 
 
விராட் கோலியின் டிவிட் ஒன்றால் தோனி ஓய்வு பெற உள்ளார் என செய்திகள் பரவியது. டிவிட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, தோனியை பிசிசிஐ அலுவலகத்தில் கண்டதாகவும், இன்று 7 மணிக்கு பிரஸ் மீட் வைத்து ஓய்வை அறிவிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகின்றன. 
 
இது முற்றிலும் பொய் என இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது தோனியின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
அவர் கூறியதாவது, தோனி இதுவரை பிசிசிஐக்கு எந்த விதமான செய்தியையும் ஓய்வு குறித்து தெரிவிக்கவில்லை. எனவே, தற்போது வந்துக்கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து தோனியின் மனைவி சாக்‌ஷியும் தோனி ஓய்வு குறித்து வெளியான தகவல்கள் பொய்யானது. ஓய்வு குறித்து தோனி இன்னும் முடிவெடுக்கவில்லை என தெரிவித்துள்ளர். 
About Writer
Sugapriya Prakash