தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு

sivalingam| Last Modified வியாழன், 12 செப்டம்பர் 2019 (18:08 IST)
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரது பெயர் அணியின் பட்டியலில் இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலான விஷயமாகும்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பின்வருமாறு: மயாங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரே, விராத் கோஹ்லி, ரஹானே, விஹாரி, ரிஷப் பண்ட், சஹா, ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, பும்ரா, ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி விசாகப்பட்டிணத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி புனேயிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 19ஆம் தேதி ராஞ்சியிலும் நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டிக்க்கு முன்னதாக செப்டம்பர் 15ஆம் தேதி டி20 தொடர் ஆரம்பிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மேலும் படிக்கவும் :