தோனி புறக்கணிக்கப்படுகிறாரா ? – மறுக்கும் தேர்வுக்குழு உறுப்பினர் !

Last Modified ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (11:00 IST)
தோனிக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சைகளை தேர்வுக்குழு உறுப்பினர் மறுத்துள்ளார்.

உலகக்கோப்பைக்குப் பிறகு நடந்துகொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரானத் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் தோனி ராணுவத்தில் இரண்டு மாதம் பணியாற்றும் முடிவை எடுத்து தற்போது காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து அடுத்த மாதம் தொடங்க தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி 20 தொடரிலும் தோனிக்கு வாய்ப்பு மறுக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியா வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் முதலில் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கும் டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டி 20 உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் சுழற்சி முறையில்  வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் தோனி தொடர்ந்து இந்திய அணியில் புறக்கணிக்கப்படுவதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்த நிலையில் அதனை தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் மறுத்துள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ’2020ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள நிலையில் அடுத்த கட்ட விக்கெட் கீப்பரை தயார்படுத்த அவகாசம் வழங்கியுள்ளார். ரிஷப் பண்ட்டுக்கு மாற்று கீப்பர் யாரும் நம்மிடம் இல்லை. அதற்கானத் தேர்வும் நடந்துகொண்டு இருக்கிறது. தோனியின் 2 மாத கால ஓய்வு இன்னும் முடியவில்லை. அதனால்தான் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரானப் போட்டியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :