இன்று ஓய்வை அறிவிக்கும் தோனி... கோலி போட்ட டிவிட்: மீளா துயரத்தில் ரசிகர்கள்!!

Sugapriya Prakash| Last Updated: வியாழன், 12 செப்டம்பர் 2019 (16:08 IST)
தோனி இன்று 7 மணிக்கு பிரஸ் மீட் வைத்து ஓய்வை அறிவிக்க உள்ளதாக வெளியாகும் செய்திகளால் ரசிகர்கள் துயரத்தில் உள்ளனர். 
 
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த கிரிக்கெட் வீரருமான மகேந்திர சிங் தோனி, இன்ற்ரவு 7 மணி அளவில் ஓய்வை அறிவிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீயாய் பரவி வருகிறது. 
 
டி20, 50 ஓவர், டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து விதமான போட்டிகளிலும் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன், இந்திய அணிக்கு 28 வருடங்கள் கழித்து உலகக்கோப்பை பெற்றுத்தந்தவர் என பல பெருமைகளை கொண்ட தோனி தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருப்பவர். 
dhoni
இந்நிலையில், கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது ராணுவ பயிற்சிக்கு சென்ற அவரை, தென் ஆப்ரிக்கா டி20 இந்த்ய அணியில் பிசிசிஐ தேர்வு செய்யவில்லை. தோனியே இளம் வீரர்களை தேர்வு செய்யும்படி கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியானது. 
 
இப்படி இருக்கையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து மறக்க முடியாத புகைப்படம் என பதிவிட்டுள்ளார். 
இதனால் தோனி ஓய்வு பெற உள்ளார் என செய்திகள் பரவியது. டிவிட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, தோனியை பிசிசிஐ அலுவலகத்தில் கண்டதாகவும், இன்று 7 மணிக்கு பிரஸ் மீட் வைத்து ஓய்வை அறிவிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகின்றன. 
 
தோனியின் ஓய்வு குறித்த உண்மை நிலை என்னவென தெரியாத நிலையில், இம்மாதியான செய்திகள் தோனி ரசிகர்கள் கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :