செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (07:45 IST)

வெற்றிகரமான கேப்டன்: தோனியை முந்திய விராத்கோஹ்லி

அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற பெருமையை இதுவரை தல தோனி தக்கவைத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த சாதனையை விராத் கோஹ்லி முறியடித்துள்ளார் 
 
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்
 
60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து, 27 வெற்றிகளை முன்னாள் கேப்டன் தோனி பெற்றிருந்த நிலையில் 48 போட்டிகளில் 28வது வெற்றியை பதிவு செய்து விராத் கோஹ்லி தோனியை முந்தினார். விராத் கோஹ்லி, தோனியை அடுத்து சவுரவ் கங்குலி 21 வெற்றிகளை பெற்ற கேப்டனாக 3வது இடத்திலும், 14 வெற்றிக்ளை பெற்ற கேப்டனாக அசாருதீன் 4வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
வெற்றிமேல் வெற்றியை குவித்து இந்திய அணியை வெற்றி அணியாக மாற்றியுள்ள விராத் கோஹ்லிக்கு கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது