தொடர்புடைய செய்திகள்
- இங்கிலாந்தில் இருந்துகொண்டு யோயோ டெஸ்ட்டில் கலந்துகொண்ட கோலி.. கிளம்பிய சர்ச்சை!
- ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் ‘பாஸ்’ ஆன கோலி!
- ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் எடுத்த அதிரடி முடிவு.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!
- ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் சஸ்பெண்ட் இல்லை.. விதிகளில் திருத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு..!
- ஓய்வு பெறும் மறுநாளே புதிய பொறுப்பு.. சங்கர் ஜிவால் IPS-க்கு என்ன பதவி?
ஓய்வு முடிவில் இருந்து திரும்ப வந்த ராஸ் டெய்லர்… தாயாரின் பிறந்த நாட்டுக்காக விளையாட முடிவு!
நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் நியுசிலாந்து அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகள், 233 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். நியுசிலாந்து அணிக்காக அதிக சர்வதேச ரன்கள் அடித்த வீரராக ராஸ் டெய்லர் இருந்தார்.
ஆனால் தற்போது ஓய்வை அறிவித்து நான்கு ஆண்டுகள் கழித்து அவர் தற்போது மீண்டும் சர்வதேசக் கிரிக்கெட்டுக்குத் திரும்பியுள்ளார். ஆனால் நியுசிலாந்து அணிக்காக அவர் விளையாடப் போவதில்லை. அவரின் தாயார் பொறந்த சமோவா என்ற நாட்டுக்காக தனது 41 ஆவது வயதில் களமிறங்கவுள்ளார்.
ஓமனில் விரைவில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்காக டி 20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று தொடரில் பங்கேற்கும் சமோவா அணியில் ராஸ் டெய்லர் இடம்பிடித்துள்ளார்.