1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. CSK Face Gujarat Titans in Crucial Final IPL League Match of the Season

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

ஐபிஎல் 2026
ஐபிஎல் தொடரின் 66-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இதுவே நடப்பு தொடரின் கடைசி லீக் ஆட்டமாகும்.
 
பிளே-ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்ட சென்னை அணி, தனது கடைசி முயற்சியாக இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. இப்போட்டியில் வென்றாலும், மற்ற அணிகளின் போட்டி முடிவுகள் சென்னைக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பு கணியும் என்பதால் சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே உள்ளிட்டோர் பேட்டிங்கிலும், அกีல் ஹுசைன், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் பௌலிங்கிலும் கவனம் பெறுகின்றனர்.
 
மறுபுறம், குஜராத் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் ஒன்றை உறுதி செய்து, குவாலிஃபையர் 1-க்கு தகுதி பெறும் முனைப்புடன் உள்ளது. சென்னைக்கு எதிராக பெறும் பெரிய வெற்றி, குஜராத் அணியை முதலிடத்திற்குக்கூட கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. 
 
குஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன் ஆகியோர் பேட்டிங்கிலும், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், ரஷீத் கான் ஆகியோர் பௌலிங்கிலும் பலம் சேர்க்கின்றனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?