தொடர்புடைய செய்திகள்
- ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் ‘பாஸ்’ ஆன கோலி!
- ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் எடுத்த அதிரடி முடிவு.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!
- ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் சஸ்பெண்ட் இல்லை.. விதிகளில் திருத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு..!
- ஓய்வு பெறும் மறுநாளே புதிய பொறுப்பு.. சங்கர் ஜிவால் IPS-க்கு என்ன பதவி?
- 75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என ஒருபோதும் சொல்லவில்லை: மோகன் பகவத் மறுப்பு
இங்கிலாந்தில் இருந்துகொண்டு யோயோ டெஸ்ட்டில் கலந்துகொண்ட கோலி.. கிளம்பிய சர்ச்சை!
விராட் கோலி கடந்த ஆண்டு டி 20 போட்டிகளில் இருந்தும், இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் கோலி. தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டும் அவர் விளையாடி வரும் நிலையில் இந்திய அணியில் பிட்னெஸுக்காக நடத்தப்படும் யோ யோ டெஸ்ட்டில் அவர் சமீபத்தில் கலந்துகொண்டார். அதில் அவர் தேர்வாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்திய அணி இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதில்தான் தற்போது சர்ச்சைக் கிளம்பியுள்ளது. ஏனென்றால் கோலி இந்தியாவுக்கு வந்து அந்த டெஸ்ட்டில் பங்கேற்காமல் இங்கிலாந்தில் இருந்தபடியே அந்த டெஸ்ட்டில் கலந்துகொண்டுள்ளார். மற்ற வீரர்கள் எல்லாம் பெங்களூரு வந்து உடல் தகுதியை நிரூபித்த நிலையில் கோலிக்கு மட்டும் ஏன் இந்த சலுகை எனக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
கடந்த சில மாதங்களாக விராட் கோலி தனது குடும்பத்தோடு லண்டனில்தான் வசித்து வருகிறார். போட்டிகளில் விளையாட மட்டுமே அவர் இந்தியாவுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.