1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma talked about why four spinners in Indian team

நான்தான் நான்கு ஸ்பின்னர்கள் கேட்டேன்… அந்த ரகசியத்த அமெரிக்கா போனதும் சொல்றேன் – கேப்டன் ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன. 20 அணிகள் மோதுகின்ற நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர்.

இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு விதமான கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் ஆடுவதற்கு எதற்கு நான்கு ஸ்பின்னர்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. கண்டிப்பாக நான்கு பேரையும் பயன்படுத்தப் போவதில்லை என்பதால் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இதுபற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா. அதில் “நான்தான் அணியில் நான்கு ஸ்பின்னர்கள் வேண்டும் எனக் கேட்டேன். அது ஏன் என்பதை இப்போது சொல்லப்போவதில்லை. அமெரிக்கா சென்றதும்  அந்த ரகசியத்தை வெளியிடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ரிங்கு சிங் மேல் எந்த தவறும் இல்லை… அவரை அணியில் எடுக்காததற்குக் காரணம் இதுதான் – அஜித் அகார்கர்!