திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 2 மே 2024 (17:08 IST)

டி 20 உலகக் கோப்பைக்காக அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட செயற்கை ஆடுகளங்கள்!

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன. 20 அணிகள் மோதுகின்ற நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரின் 8 லீக் போட்டிகள் அமெரிக்க மைதானமான நசாவ் கவுண்டு மைதானத்தில் நடக்க உள்ளன. இந்த மைதானத்தை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கி வருகின்றன. இந்த ஆடுகளத்தின் புற்கள் பகுதிக்காக 10 இடங்களில் செயற்கை ஆடுகளங்கள் உருவாக்கப்பட்டு அதிலிருந்து புற்கள் கொண்டுவரப்பட்டு மைதானத்தில் பதித்துள்ளனர்.

இந்த மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, கனடா, அயர்லாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் மோதும் போட்டிகள் நடைபெறுகின்றன.