தொடர்புடைய செய்திகள்
- இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!
- ஐபிஎல் வெல்வதை விட இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது முக்கியமானது- கேப்டன் கில்!
- பெயர் மாறினாலும் பட்டோடிக்குக் கௌரவம்… இங்கிலாந்து தொடர் குறித்து சச்சின் கருத்து!
- 18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!
- மரியாதை வேண்டுமென்றால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடவேண்டும்… பும்ரா சொல்லும் அட்வைஸ்!
டாஸ் வென்று சொதப்பிவிட்டேன்… தன்னுடைய ஞாபக மறதி குறித்து பகிர்ந்த ரோஹித் ஷர்மா!
இந்திய அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் ரோஹித் ஷர்மா. அவர் தலைமையில் இந்திய அணி இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அதுபோல ஐபிஎல் தொடரில் அவர் மும்பை அணிக்கு 5 கோப்பைகளை தன் தலைமையில் பெற்றுக் கொடுத்துள்ளார்.
அதே போல இந்திய அணிக்குத் தலைமை தாங்கி டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட பட்டங்களையும் வென்று கொடுத்துள்ளார். டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர் தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ரோஹித் ஷர்மா சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடைய ஞாபக மறதி சொதப்பல் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரின் போது டாஸ் வென்றால் பந்துவீசவேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் டாஸ் வென்றுவிட்டு நான் பேட் செய்ய போவதாக அறிவித்து விட்டேன். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் அனில் கும்ப்ளே என்னிடம் ஏன் இப்படி செய்தீர்கள்? எனக் கேட்டார்.
பிட்ச் நன்றாக உள்ளது. அதனால்தான் பேட்டிங் எடுத்தேன் எனக் கூறி சமாளித்தேன். நல்ல வேளையாக அன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.