தொடர்புடைய செய்திகள்
- ‘கிரிக்கெட்டை விட கோலி பெரியவர் இல்லை’… அஸ்வின் கருத்து!
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… ரவி சாஸ்த்ரி கணித்த ப்ளேயிங் லெவன்!
- நான் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கவில்லை?… பும்ரா பதில்!
- தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?
- கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!
மரியாதை வேண்டுமென்றால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடவேண்டும்… பும்ரா சொல்லும் அட்வைஸ்!
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக . இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் வரும் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இம்முறை கோலி, ரோஹித் மற்றும அஸ்வின் ஆகிய் மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இது இளம் இந்திய அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் எனபதும் இந்திய அணிக்குக் கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டை எந்தளவுக்கு மதிக்கிறார் என்பதை சமீபத்தில் அளித்த நேர்காணலில் வெளிபடுத்தியுள்ளார். அதில் “ஒருமுறை விராட் கோலி என்னிடம் உனக்கு மரியாதைக் கிடைக்கவேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும்” என சொன்னார். டெஸ்ட் விளையாடினால் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் மதிக்கப்படுவோம். அதே போல டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினால் நீங்கள் எதிர்பார்க்கும் மரியாதைக் கிடைக்கும் என்று இளம் வீரர்களிடம் சொல்வேன்” எனக் கூறியுள்ளார்.