வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (09:42 IST)

ஆர் சி பி அணிக்காக விளையாட ஆசை… ரிங்கு சிங் ஓபன் டாக்!

சமீபகால இந்திய அணியின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவராக இருக்கிறார் ரிங்கு சிங். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி கவனம் ஈர்த்த ரிங்கு, இப்போது இந்திய டி 20 அணியின் பினிஷராக செயல்பட்டு வருகிறார்.

விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான அணியிலும் அவர் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரிங்கு சிங்கை தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள ரிங்கு “கொல்கத்தா அணி என்னைத் தக்க்வைக்குமா என்று தெரியவில்லை. அப்படித் தக்கவைக்கவில்லை எனில் ஆர் சி பி அணிக்காக விளையாட ஆசைப்படுகிறே” எனக் கூறியுள்ளார்.