ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (08:59 IST)

சூர்யகுமாருக்கு குறிவைக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்? - கேப்டன் பதவி வழங்குவதாக டீலிங்!

Suryakumar Yadav

அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் சூர்யகுமார் யாதவ்வை கொல்கத்தா அணி வாங்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் அணிகளை சேர்ந்த வீரர்கள் பலரும் பல அணிகளுக்கு மாற்றப்படும் சூழல் உண்டாகியுள்ளது, யார் எந்த வீரரை பிடிப்பது என ஒவ்வொரு அணியும் தீவிரமாக திட்டமிட்டு வருகின்றன.

 

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் மும்பை அணியில் உள்ள ரோஹித் சர்மா ஆதரவு வீரர்கள் பலரும் மும்பை அணியை விட்டு வெளியேற நினைப்பதாக பேசிக்கொள்ளப்படுகிறது. 

 

ரோஹித் சர்மாவே அடுத்த சீசனில் மும்பை அணியில் இருந்து வெளியேற யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மும்பை அணியின் மற்றொரு வீரரான சூர்யக்குமார் யாதவ்வை தங்கள் அணியில் எடுக்க ஷாரூக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு கேப்டன் பதவி வழங்கவும் கொல்கத்தா அணி டீலிங் பேசி வருகிறதாம். சூர்யக்குமார் யாதவ் ஏற்கனவே கடந்த 2014-2017ம் ஆண்டுகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K