திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (10:07 IST)

ஒரு தொப்பி இத்தனை கோடியா? ஏலத்தில் விடப்பட்ட இண்டியானா ஜோன்ஸின் தொப்பி!

Indiana Jones

பிரபல ஹாலிவுட் படமான இண்டியானா ஜோன்ஸில் பயன்படுத்தப்பட்ட தொப்பி ஒன்று பல கோடிக்கு ஏலத்தில் விற்பனையான சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

80கள், 90களை சேர்ந்தவர்களுக்கு விருப்பமான ஹாலிவுட் படங்களில் டாப் 10ல் ஒன்றாக கண்டிப்பாக இண்டியானா ஜோன்ஸ் இருக்கும். 1984ம் ஆண்டு ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான இண்டியானா ஜோன்ஸ் படம்தான், இண்டியானா ஜோன்ஸ் பட வரிசைகளுக்கு தொடக்க புள்ளி. இந்த முதல் படமான ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பிள் ஆப் டூம், அந்த சமயத்தில் இந்திய கலாச்சாரத்தை தவறாக சித்தரிப்பதாக இந்தியாவில் தடை கூட செய்யப்பட்டு பின் அனுமதிக்கப்பட்டதெல்லாம் தனிக் கதை.

 

இந்த படத்தின் மூலம் இண்டியானா ஜோன்ஸாக அறிமுகமான ஹாரிசன் ஃபோர்டு, பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும், இண்டியானா ஜோன்ஸ் என்றால் ஹாரிசன் ஃபோர்டுதான் என்றே மனதில் பதிந்துவிட்டார். கடைசியாக வந்த டயல் ஆப் டெஸ்டைனி படத்திலும் ஹாரிசன் ஃபோர்டே இண்டியானா ஜோன்ஸாக நடித்திருந்தார். எத்தனையோ ஜேம்ஸ் பாண்டுகள் மாறிவிட்ட ஹாலிவுட்டில், இண்டியானா ஜோன்ஸ் என்றால் அது ஹாரிசன் ஃபோர்ட் மட்டும்தான், தற்போது வரை!

 

அப்படிபட்ட இண்டியானா ஜோன்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட தொப்பி ஒன்று சமீபத்தில் ஏலத்துக்கு வந்துள்ளது. டெம்பிள் ஆப் டூம் படத்தில் ஹாரிசன் பயன்படுத்திய இந்த தொப்பி, அவரது டூப் கலைஞரான டீன் பெராடினி என்பவரிடம் இருந்தது. சமீபத்தில் பெராடினி மறைந்துவிட்டதால் இந்த தொப்பி ஏலத்திற்கு வந்தது. இந்திய மதிப்பில் இந்த தொப்பி சுமார் ரூ.5.28 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. 

 

Edit by Prasanth.K