வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (14:33 IST)

ஏற்கனவே ரெண்டு டக் அவுட்.. அம்பயரிடம் ஜாலியாக சண்டை போட்ட ரோஹித் ஷர்மா!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் சமமான ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவர் போடப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமான ரன்கள் எடுத்ததால் இரண்டாவது சூப்பர் ஓவர் போடப்பட்டது. அதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடி 69 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்களை 22 ரன்களுக்குள் இழந்து தடுமாறியது. அந்த நிலையில் இருந்து அணியை 212 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்றார் ரோஹித். இந்த சதம் அவர் சர்வதேச டி 20 போட்டிகளில் அடிக்கும் ஐந்தாவது சதமாகும்.

இந்த போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. ரோஹித் ஷர்மா பேட் செய்யும் போது ஒரு பவுண்டரி அடிக்க அதை லெக் பைஸ் என நடுவர் அறிவித்தார். ஆனால் அது பேட்டில் பட்டு சென்றது. அதனால் ரோஹித் ஜாலியாக நடுவரிடம் “ஏன் அதை லெக் பைஸ் கொடுத்தீர்கள். அது பேட்டில் பட்டுதான் சென்றது. ஏற்கனவே இந்த சீரிஸில் இரண்டு டக் அவுட்” என ஜாலியாக சீண்டினார்.