1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (12:56 IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி முதல்வர் கைது

திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

திண்டினவத்தை அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் என்ற சிபிஎஸ்இ பள்ளியில் நூற்றுக் கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் படித்து வரும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதாவது, கடந்த ஓராண்டாகவே அவர் தனது தனி அறைக்கு மாணவிகளை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து, மாணவிகள், சக மாணவியரிடம் தெரிவித்து, அவர்கள் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பலகட்ட விசாரணைக்கு பின்னர், போக்சோ வழக்கில் பள்ளி முதல்வர் கார்த்திகேயனை போலீஸார் கைது செய்தனர்.

அதன்பின்னர், அவரை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.