தொடர்புடைய செய்திகள்
- ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- சீனாவில் தடை இருந்தாலும் பல லட்சம் பேர் ரகசியமாக பின்தொடரும் 'ஃபலூன் காங்' - ஏன் தெரியுமா?
- சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எப்போதும் எதிர்ப்பு இருக்கும்- முதல்வர் பினராயி விஜயன்
- அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது.. ஞானசூனியமாக இருக்கிறார்! – சீதாராம் யெச்சூரி கடும் விமர்சனம்!
- சீனாவில் மசூதிகளை அரசே இடிக்கிறதா? கம்யூனிஸ்ட் ஆவணம் கூறுவது என்ன?
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா பெயரில் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி: சீதாராம் யெச்சூரி!
அயோத்தியில் ராமர் கோவில் திருவிழா என்ற பெயரில் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி நடப்பது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்
ஒவ்வொரு கட்சிக்கும் சமூக நல்லிணக்கத்தை பேண உரிமை உண்டு என்றும் வகுப்பு வாதமோ, பிரிவினவாதமோ கட்சியின் கொள்கையாக இருக்கக் கூடாது என்றும் கூறிய சீதாராம் யெச்சூரி அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா மூலம் நாட்டை பிளவுபடுத்த முயற்சி நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் மத அடிப்படையில் இயங்கக்கூடாது என்றும் மத நல்லிணக்கம் மற்றும் அரசியல் அமைப்பின் கொள்கைகளை பாதுகாக்க ஒவ்வொரு கட்சியும் பாடுபட வேண்டும் என்றும் பாஜக இந்த விழாவை உண்மையான சுதந்திரம் நிறைவேறிய கனவு என்று குறிப்பிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சிக்கும் பாஜகவுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்,
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
