திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (13:11 IST)

இந்தியாவில் டீன் ஏஜ் சிறுவர்களுக்கு தாய் மொழியில் படிக்க தெரியவில்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவில் டீன் ஏஜ் சிறுவர் சிறுமிகளுக்கு தங்களது தாய் மொழியில் படிக்க தெரியவில்லை என சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.  
 
  14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களிடம் சமீபத்தில் ஆய்வு எடுக்கப்பட்ட நிலையில் ஆங்கிலத்தை 42 சதவீதம் சிறுவர்கள் படிப்பதாகவும் ஆனால் தாய் மொழியில் மிகவும் குறைவான சிறுவர்களே படித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.  

மேலும் இந்த கணக்கெடுப்பில் ஸ்மார்ட் போன் மூலம் படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கிட்டத்தட்ட 95% சிறுவர்கள் ஸ்மார்ட் போன் மூலம் படிக்கிறார்கள் என்றும் ஸ்மார்ட் ஃபோனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.  
 
மேலும் 84% பேர் எட்டு வருட பள்ளி படிப்பை முடித்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 26 மாநிலங்களில் 28 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த ஆய்வில் தாய்மொழியில் படிக்கத் தெரியாத டீன் ஏஜ் சிறுவர்கள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva