1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma clarification about kohli as opener

என்னப்பா குழப்புறீங்க… டி 20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து ரோஹித் கருத்து!

விராட் கோலி
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் அங்குள்ள ஆடுகளங்கள் கோலியின் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார் என்று தற்போது சொல்லப்படுகிறது. அவர் அணியில் இடம்பெற்றாலும் அவருக்கான இடம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால் என பல இளம் வீரர்கள் டி 20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் கோலியும் ரோஹித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என தகவல்கள் பரவி வருகின்றன. அதுபற்றி இப்போது விளக்கம் அளித்துள்ள ரோஹித் ஷர்மா “தொடக்க ஆட்டக்காரர்களாக யார் விளையாடுவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இதுபற்றி என்னிடம் இருந்தோ ராகுல் டிராவிட்டிடம் இருந்தோ தகவல்கள் வரும் வரை இதுபோல பரவும் தகவல்கள் அனைத்தும் பொய்யே” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது வேல்ஸ் ஃபுட்பால் கிளப்!