செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2024 (15:31 IST)

இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க ‘வேட்டையன்’ இயக்குநர் கோரிக்கை.. ரஜினி என்ன நினைப்பார்?

இந்தியா கூட்டணிக்கு வாக்காளியுங்கள் என வேட்டையின் பட இயக்குனர் ஞானவேல் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நிலையில் பாஜக ஆதரவாளரான ரஜினி என்ன நினைப்பார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
 
ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்திற்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் இயக்கங்கள் ஞானவேல் தனது சமூக வலைதளங்கள் கூறியிருப்பதாவது:
 
வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை. இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன.
 
மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்
 
Edited by Mahendran