1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Virat kohli will open with Rohith Sharma In T20 world cup

ரோஹித்& கோலியை கூட்டணிக்கு ஸ்கெட்ச் போடும் பிசிசிஐ… டி 20 உலகக் கோப்பை அணியில் நடக்கும் மிகப்பெரிய மாற்றம்!

விராட் கோலி
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் அங்குள்ள ஆடுகளங்கள் கோலியின் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார் என்று தற்போது சொல்லப்படுகிறது. அவர் அணியில் இடம்பெற்றாலும் அவருக்கான இடம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால் என பல இளம் வீரர்கள் டி 20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் அவரை கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு இணைத்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் இளம் வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு அணியில் இடம் இருக்குமா, அப்படி இருந்தால் அவர்கள் எந்த இடத்தில் இறங்குவார்கள் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
“சாம்பியன் போல விளையாட வேண்டும் என பேசிக்கொண்டோம்…” வெற்றி குறித்து ரிஷப் பண்ட் மகிழ்ச்சி!