செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 5 டிசம்பர் 2024 (08:15 IST)

ரோஹித் ஷர்மா எந்த இடத்தில் இறங்கினால் சரியாக இருக்கும்… ரவி சாஸ்திரியின் கருத்து!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி(நாளை) தொடங்கி நடைபெற உள்ளது.

முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா ஆடாததால் அவருக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக ஆடினார் கே எல் ராகுல். முதல் போட்டியில் மிகச்சிறப்பாக பாட்னர்ஷிப்பை உருவாக்கிய கே எல் ராகுல் இரண்டாவது போட்டியில் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆனால் பலரும் புதுப்பந்தை எதிர்கொண்டு ஆடுவதில் ராகுல் சிறப்பாக இருக்கிறார். அதனால் அவரையே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வைக்கவேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இது குறித்து பேசும்போது “என்னைப் பொறுத்தவரை ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் ஆடவேண்டும். அப்போதுதான் இந்திய அணி இளமையும் அனுபவமும் கலந்த கலவையாக இருக்கும். அவர் இன்னும் ஆஸ்திரேலியாவில் போதுமான நாட்களை செலவிடவில்லை. அதனால் அவரை ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் விளையாட வைக்கலாம்” எனக் கூறியுள்ளார்.