இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்
சிறுபான்மையினர் தாக்கப்படுவது குறித்தும் இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறித்தும் இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார்.
இவர் தனது சுயசரிதையில், இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து மோடிக்கு இடம் கவலை தெரிவித்தேன். ஆனால், அவர் "இந்தியாவில் பிற மதத்தினர் தாக்குதல் இல்லை" என்று கூறினார். அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 600 பக்கங்கள் கொண்ட இந்த சுயசரிதையில், 2005 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தனக்கும் இந்திய பிரதமர்களுக்கும் இடையே உள்ள சந்திப்பு குறித்து பல விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் செயல்பாடுகளை பற்றி அதிகமாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாகவும், இந்தியாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
மோடி பதவி ஏற்ற பிறகு, இந்து தேசியவாதிகளால் மற்ற மதத்தினர் தாக்கப்படுகிற சம்பவங்களைப் பற்றியும் கவலைப்பட்டதாகவும், இதனை மோடியின் முன் கோரிக்கையாக வைத்த போது, மோடி அதை மறுத்து, "இந்தியா மத சகிப்புத்தன்மையுடன் உள்ளது" என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.
அந்த பதிலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் அந்த சுயசரிதியில் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Mahendran