1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. google india layoffs 453 staffs

இரவோடு இரவாக 453 ஊழியர்களை பணிநீக்கம்: கூகுள் இந்தியா அதிரடி நடவடிக்கை..!

google
கூகுள் நிறுவனம் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் 12,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது கூகுள் இந்தியா 453 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 
 
நேற்று இரவு 453 கூகுள் இந்திய ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
நேற்று வரை கூகுள் நிறுவனத்தில் ஊழியர் ஆக இருந்தவர்கள் இன்று காலை தூங்கி எழும்போது அந்த நிறுவனத்தில் இருந்து தாங்கள் விரட்டி அடிக்கப்பட்டோம் என்பதை அறிந்து கண்ணீருடன் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 
 
ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கூகுள் நிறுவனத்தின் இந்த அடுத்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மற்றும் புள்ளி
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மோடி குறித்த ஆவணப்படத்தை பிபிசி ஒளிபரப்பி இருக்கக்கூடாது: இங்கிலாந்து எம்பி கருத்து..!