1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith and dhawan duck out in yesterday match

தவான் சொன்னது போல ரோஹித்தை டக் அவுட் ஆக்கிய டெல்லி! ஆனால் தவானின் நிலைமை!

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா பார்மில் இல்லை அதனால் அவரை சீக்கிரமாக வீழ்த்துவோம் என டெல்லி பேட்ஸ்மேன் ஷிகார் தவான் தெரிவித்திருந்தார்.

நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது. இந்நிலையில் திடீரென ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கினார்.

இந்நிலையில் நேற்று நடந்த குவாலிபையர் போட்டியில் டெல்லிக்கு எதிராக மும்பை மோதவுள்ள நிலையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் ரோஹித்தின் பேட்டிங் பற்றி பேசி இருந்தார். அதில் ‘ கடந்த இரண்டு வாரங்களாக ரோஹித் விளையாடாததால் அவர் பேட்டிங் டச்சில் இல்லை. அதை நாங்கள் கண்டிப்பாக பயன்ப்டுத்திக் கொள்வோம்.’ எனக் கூறியுள்ளார்.அதன் படி அஸ்வின் அவரை டக் அவுட் செய்து வெளியேற்றினார்.

ஆனால் அதைவிட பெரிய கொடுமையாக ஷிகார் தவானும் பூம்ரா பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அடுத்த கட்டுரையில்
கப்பு முக்கியம் பிகிலு.. தீவிர எதிர்பார்ப்பில் சன் ரைஸர்ஸ், ஆர்சிபி போட்டி!