திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2020 (21:15 IST)

ஐபிஎல்- ஜுவாலிபையர் -1 - டெல்லி அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினத்துடன் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் இன்று குவாலிபயர் 1 போட்டியில் இன்று இரவு 7:30 மணிக்கு டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின.

முதலில் மும்பை அணி பேட்டிங் செய்தது.   இதில் 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 201 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதும் தோல்வி அடையும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் டெல்லி கடினை இலக்கை விரட்ட போராடும் என தெரிகிறது.