திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (16:31 IST)

ரோகித் ஷர்மாவுக்கு காயம்.. பயிற்சியிலிருந்து விலகல்!? – என்னவாகும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்?

Rohit sharma
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று ரோகித் சர்மா பயிற்சியிலிருந்து வெளியேறியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்களால் வெகுவாக எதிர்பார்கப்பட்டு வரும் இந்த டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 7) தொடங்கி ஜூன் 11 வரை நடைபெறுகிறது.

ஐபிஎல் முடிந்த கையோடு டெஸ்டுக்கு தேர்வான இந்திய அணி வீரர்கள் லண்டன் புறப்பட்டு சென்று தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் பயிற்சியிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர் நாளை தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சிறிய காயம்தான் என்றும் அவர் விளையாட வாய்ப்புகள் உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Edit by Prasanth.K