1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 மே 2023 (13:07 IST)

ருதுராஜுக்கு பதிலாக களமிறங்கும் ஜெய்ஸ்வால்!? – திடீர் மாற்றம் ஏன்?

ஜூன் 7ம் தேதி தொடங்க உள்ள ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற உள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஐபிஎல்லில் தற்போது விளையாடிக் கொண்டுள்ள வீரர்கள் தவிர மற்ற அனைவரும் டெஸ்ட் போட்டி பயிற்சிகளுக்காக லண்டன் சென்றுள்ளனர்.

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ள வீரர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம்பெற்ற ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஜூன் 3ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் உடனடியாக அவர் போட்டிக்கு திரும்ப முடியாது என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K