1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohit Sharma Better Batsman Than Kohli Pakistan Ex

கோலியைவிட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் - பாகிஸ்தான் முன்னாள்

Rohit sharma
சர்வதேச கிரிக்கெட்டில் கோலியை ரோஹித் சர்மா சிறந்தவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி திறமையாக செயல்பட்டு முன்னணி அணியாகச் செயல்பட்டு வருகிறது.

முன்னாள் கேப்டனாக கோலி இருந்தபோது,  நம்பர் 1 இடத்தில் இருந்த இந்திய அணி, உலகக் கோப்பையில் தோல்வியைச் சந்தித்ததால், கடும் விமர்சனங்கால் கோலி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ரோஹித் சர்மா கேப்டனாகப் பொறுப்பு வகிக்கிறார்.

தற்போது ஒரு நாள் தரவரிசையில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித்சர்மா பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோஹைல் கூறியுள்ளதாவது:

விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். ஆனால், அவரை விட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன். கடந்த 12 ஆண்டுகளாக ரோஹித் தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் 46 சதங்களும், டெஸ்டில் 27 சதங்களும் அடித்துள்ள நிலையில், மொத்தம் 74 சதங்கள் அடித்துள்ளார், இன்னும் ஒரு நாள் போட்டியில் 4 சதங்கள் அடித்தால் அவர் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தோல்வி