ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified திங்கள், 30 ஜனவரி 2023 (16:30 IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் தமிழக வீரர்

murali vijay
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் தமிழக வீரர்
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறிய போது 'சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
2002 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை என் வாழ்வில் சிறப்பான தருணங்களாக அமைந்தன. இந்திய அணிக்காக விளையாடியதை மிகவும் பெருமையாக நான் கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு தந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவற்றுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
என் சக வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி உதவியாளர்கள், என்னுடைய கிரிக்கெட் பயணம் சிறப்பாக இருக்க உதவியாக இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எனக்கு நிபந்தனை அற்ற அன்பையும் ஆதரவும் எனக்கு அளித்தனர். அவர்கள் எனக்கு முதுகெலும்பு போல் இருந்தனர், அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என முரளி விஜய் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran