1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rishab pant should take time to recover

குணமாவதற்கு போதுமான நாட்களை எடுத்துக் கொள்ளுங்கள்… பண்ட்டுக்கு கங்குலி அட்வைஸ்!

ரிஷப் பண்ட்
சில மாதங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார் ரிஷப் பண்ட். இதையடுத்து அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மெல்ல மெல்ல அவர் குணமாகி வருகிறார்.

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் நடக்க ஆரம்பித்த அவர், இப்போது அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு சென்றுள்ளார். நீச்சல் குளத்தில் கைத்தடி உதவியோடு நடக்க ஆரம்பித்துள்ளார். அவர் வேகமாக உடல்நலம் பெற்றாலும், கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இன்னும் ஒரு ஆண்டாவது ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விரைவில் ஐபிஎல் போட்டி தொடங்க உள்ள நிலையில் ரிஷப் பண்ட்டை இழந்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குனர் கங்குலி “பண்ட்டின் இழப்பால் அணியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை யாராலும் நிரப்ப முடியாது.  திறமையும், இளமையும் கொண்டுள்ள அவர் மீண்டும் அணிக்கு திரும்ப நாங்கள் பிராத்திக்கிறோம். அவர் குணமாக போதுமான நாட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்-2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் இவரா?