1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 மார்ச் 2023 (19:46 IST)

மகளிர் ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று: டாஸ் வென்ற உபி அணியின் அதிரடி முடிவு..!

கடந்த சில நாட்களாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் லீக் போட்டிகள் முடிந்து இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. மும்பை மற்றும் உத்தரப்பிரதேச அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் டெல்லி அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த போட்டி சற்றுமுன் தொடங்கிய நிலையில் உத்தரப்பிரதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து மும்பை அணி சற்று முன் களத்தில் இறங்கி விளையாடி வருகிறது என்பதும் அந்த அணி விக்கெட்டை இழப்பின்றி 4 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தொடக்க வீராங்கனைகளான மாத்யூஸ் மற்றும் ஹெய்லே பாட்டியா விளையாடி வருகின்றனர் இன்றைய போட்டியில் வெற்றி முக்கியம் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva