1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified திங்கள், 27 மார்ச் 2023 (17:14 IST)

ஐபிஎல்-2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் இவரா?

kolkata knight riders
கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணியின்  புதிய கேப்டனாக சுனில் நரைன் அல்லது ஷர்துல் தாக்கூர் என தகவல் வெளியாகிறது.

ஐபிஎல் ஆண்கள் கிரிக்கெட் வரும் மார்ச் 31 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டிக்கு, அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு கொல்கத்தா கிரிக்கெட் அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக இருந்த  நிலையில், அவர் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக விலகியுள்ளார்.

எனவே, கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணியின்  புதிய கேப்டனாக சுனில் நரைன் அல்லது ஷர்துல் தாக்கூர் என தகவல் வெளியாகிறது.

கடந்த சீசனில் 7 வது இடம்பெற்ற நிலையில், இந்த ஆண்டு இந்த அணியின் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.

இந்த அணியில், ஆண்ர்டூ ரூசல், அனுகூல் ராய், டேவிட் வீஸ், குல்வான்ட் க்யெஜொர்லியோ, தாஸ், பெர்குசன், மந்தீப் சிங், நாராயணன்ம,ராணா.  நிதிஸ், குர்பாஷ் சிங், ஹசன் , தாக்கூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.