கோலியின் பேட்டிங் ஆர்டரை மாற்ற திட்டமா?... பிசிசிஐ ப்ளான் வொர்க் அவுட் ஆகுமா?
இந்திய அணி இந்த ஆண்டு நடக்கவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து தயாராகி வருகிறது. இதற்காக பல இளம் பேட்ஸ்மேன்கள் அணியில் மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்திய அணியில் நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பது ஒரு முக்கியக் குறையாக உள்ளது. குறிப்பாக நான்காவது இடத்தில் யாரை விளையாட வைப்ப்து என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்காக சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என பலரை முயன்று பார்த்தாயிற்று. இதனால் உலகக் கோப்பையில் யாரை அந்த இடத்தில் இறக்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் அனுபவ வீரரான கோலியை நான்காம் இடத்துக்கு மாற்றி விளையாட வைக்கலாம் என திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கோலி இந்திய அணியில் அறிமுகமான போது 40 போட்டிகள் வரை நான்காம் இடத்தில்தான் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.