தொடர்புடைய செய்திகள்
- தனது 250வது போட்டியில் வெற்றியை ருசிக்குமா டெல்லி கேப்பிட்டல்ஸ்? – டாஸ் அப்டேட்!
- தொடர் வெற்றியை தக்க வைக்குமா KKR? குறுக்க இந்த DC வந்தா..? – KKR vs DC இன்று மோதல்!
- ஆலோசனைக் கூட்டத்துக்கு தாமதமாக வந்த இஷான் கிஷான்… மும்பை இந்தியன்ஸ் அணி அளித்த வினோத தண்டனை!
- ஆண்டை டீம்களுக்கு ஆப்பு அடிக்கும் குட்டி டீம்கள்! அடுத்தடுத்த போட்டிகளில் CSK, MI, RCB தோல்வி! – தடம் மாறும் ஐபிஎல்?
- எங்க அணியப் பத்தி நீங்க ஒரு விஷயத்த நீங்க தெரிஞ்சிக்கணும்… ஹாட்ரிக் தோல்விக்கு பின் பாண்ட்யாவின் பதிவு!
ஆர்சிபியின் ரெக்கார்டை மறுபடி முறியடித்த கொல்கத்தா! 273 டார்கெட்.. சாதிக்குமா டிசி?
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது அணியாக சாதனை படைத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே நடந்து வரும் போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை குவித்துள்ளது.
அதிகபட்சமாக சுனில் நரேன் 39 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். கொல்கத்தா அணியின் சிக்ஸர் நாயகன் ஆண்ட்ரே ரஸல் 19 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் எட்டே பந்துகளில் 26 ரன்களை குவித்தார்.
இவ்வாறாக மொத்தமாக 272 ரன்களை குவித்துள்ளது கொல்கத்தா அணி. முன்னதாக ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்கள் ஆர்சிபி அடித்த 263 ரன்கள் இருந்த நிலையில் சமீபத்தில்தான் சன்ரைசர்ஸ் 277 ரன்களை அடித்து அந்த சாதனையை முறியடித்தது. அதை தொடர்ந்து தற்போது இரண்டாவது அணியாக கொல்கத்தாவும் 272 ரன்கள் அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து ஆர்சிபியை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளது.
இந்த ஸ்கோரை டெல்லி அணியால் சேஸ் செய்ய முடிந்தால் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேஸிங்காக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்