தொடர்புடைய செய்திகள்
- ஆலோசனைக் கூட்டத்துக்கு தாமதமாக வந்த இஷான் கிஷான்… மும்பை இந்தியன்ஸ் அணி அளித்த வினோத தண்டனை!
- ஆண்டை டீம்களுக்கு ஆப்பு அடிக்கும் குட்டி டீம்கள்! அடுத்தடுத்த போட்டிகளில் CSK, MI, RCB தோல்வி! – தடம் மாறும் ஐபிஎல்?
- எங்க அணியப் பத்தி நீங்க ஒரு விஷயத்த நீங்க தெரிஞ்சிக்கணும்… ஹாட்ரிக் தோல்விக்கு பின் பாண்ட்யாவின் பதிவு!
- எல்லை மீறி ஹர்திக் பாண்ட்யாவை டார்ச்சர் செய்த ரசிகர்கள்… ரோஹித் ஷர்மாவின் எதிர்ப்பு!
- ‘நாங்கள் இன்னும் ஒழுக்கமாக விளையாட வேண்டும்’… ஹாட்ரிக் தோல்வி குறித்து மும்பை கேப்டன் பாண்ட்யா!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குட் நியூஸ்… கம்பேக் கொடுக்கும் சூர்யகுமார் யாதவ்.. தோல்வியில் இருந்து மீட்பாரா?
இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளையும் தோற்றுள்ளது புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் அந்த அணி நிர்வாகத்தின் மேலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மேலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் தொடரின் மிகவும் பலம்மிக்க அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான பேட்டிங் மற்றும் வலுவான பவுலிங் இருந்தும் கடந்த மூன்று சீசன்களாக சொதப்பி வருகிறது. இன்னும் இந்த சீசனில் வெற்றியை ருசிக்காத நிலையில் வரும் ஞாயிறன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் அந்த அணிக்கு ஒரு நல்ல செய்தியாக அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் காரண்மாக தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சி எடுத்து வந்த அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் ஞாயிற்றுக் கிழமை போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்