திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜூலை 2023 (09:14 IST)

பிச்சை எடுத்து கோடீஸ்வரர் ஆன மும்பை நபர்.. சொந்த வீடு, வங்கியில் கோடிக்கணக்கில் பணம்..!

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் பிச்சை எடுத்து சொந்த வீடு மற்றும் வங்கியில் கோடி கணக்கில் பணம் வைத்திருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பையில் வீதி வீதியாக பிச்சை எடுக்கும் பாரத் ஜெயின் என்பவரின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 7.5 கோடி என கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இவருக்கு 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை வருமானம் வருவதாகவும் அதாவது சராசரியாக தினமும் 2000 முதல் 2500 வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
மும்பையில் சொந்தமாக இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு வைத்திருப்பதாகவும் அதன் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் இரண்டு சொந்த கடைகள் வைத்துள்ளதாகவும் அதன் வாடகை மட்டும் மாதம் 30 ஆயிரம் வருவதாகவும் தெரிகிறது. பிச்சை எடுத்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆனாலும் இப்போதும் கூட அவர் பிச்சை எடுத்து தான் வருகிறார் என்றும் தனக்கு பிச்சை போட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran