தொடர்புடைய செய்திகள்
- பிராட் மேன், ஆனல் பார்டர் வரிசையில் ஷர்துல் தாக்கூர்… லண்டன் ஓவல் மைதானத்தில் படைத்த சாதனை!
- பெவிலியனில் தூங்கிய மார்னஸ் லபுஷான்.. திடீர்னு விக்கெட் விழுந்ததால் எழுந்து ஓடிய சம்பவம்!
- 12 ஆம் தேதி பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அரசுப் போக்குவரத்துக் கழகம்
- உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : அஸ்வினை அணியில் எடுக்காததற்கு கங்குலி விமர்சனம்
- சதத்தை நெருங்கும் ரஹானே.. புதிய சாதனைக்கு குவியும் வாழ்த்துக்கள்..!
WTC இறுதிப் போட்டியில் மாற்று வீரராக ஃபீல்டிங் செய்த அஸ்வின்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேஎ நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து ஆடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த போட்டியில் இந்திய அணியில் அஸ்வினை எடுக்காதது மிகப்பெரிய குறை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அஸ்வினை எடுக்காதது பற்றி பேசிய சுனில் கவாஸ்கர் “அஸ்வினை எடுக்காததால் ஒரு துருப்புச் சீட்டை இந்தியா இழந்துள்ளது. அவரை போல நம்பர் 1 பேட்ஸ்மேன் அணியில் இருக்கும் போது ஆடுகளத்தின் தன்மையை பற்றி நாம் பார்க்க கூடாது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் போட்டியில் அஸ்வின் சப்ஸ்ட்டியூட் வீரராக வந்து களத்தில் பீல்டிங் செய்தார். இதைப் பகிர்ந்து ரசிகர்கள் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.