1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (17:08 IST)

சதத்தை நெருங்கும் ரஹானே.. புதிய சாதனைக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுகளை இழந்த நிலையில் ரஹானே மட்டும் தனி ஒருவராக அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார். 
 
சற்றுமுன் ரஹானே 122 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து உள்ளார் என்பதும் அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ரஹானே டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் என்ற மைல்கல் என்ற சாதனையையும் செய்து உள்ளார் 
 
மேலும் 5000 ரன்கள் கடந்த 13 வது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அணி சற்றுமுன் ஆறு விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளதை அடுத்து இந்தியா கிட்டத்தட்ட ஃபாலோ ஆனில் இருந்து தப்பிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran