பிராட் மேன், ஆனல் பார்டர் வரிசையில் ஷர்துல் தாக்கூர்… லண்டன் ஓவல் மைதானத்தில் படைத்த சாதனை!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இப்போது லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. போட்டியின் மூன்று நாட்கள் முடிந்துள்ள நிலையில் ஆஸி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
நேற்று இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க உதவியதில் அஜிங்க்யே ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஜோடிக்கு மிகப்பெரிய பங்குண்டு. நேற்று ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடித்து அவுட் ஆனார். இதுவரை லண்டன் ஓவலில் தாக்கூர் மூன்று போட்டிகள் விளையாடி மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ளார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணி வீரர் இல்லாத வீரர்களில் இதுவரை டான் பிராட்மேன், ஆலன் பார்டர் ஆகியோர் மட்டுமே 3 அரைசதங்கள் அடித்துள்ளனர். அந்த ஜாம்பவான்களின் வரிசையில் இப்போது இணைந்துள்ளார் ஷர்துல் தாக்கூர்.