தொடர்புடைய செய்திகள்
- இந்திய அணி அபார வெற்றி: தொடரையும் வென்றது
- மே.இ.தீவுகள் அணிக்கு இமாயல இலக்கு: ரோஹித், ராகுல், விராத் அபார பேட்டிங்
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: அசாம் மக்களின் போராட்டமும், பின்னணியும்
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்: ரவுண்டு கட்டும் ரோகித்!
- அசாமில் போராட்டம் உச்சக்கட்டம்! – இராணுவம் குவிப்பு: இணைய சேவை முடக்கம்!
அசாம் போராட்டம் எதிரொலி! – கிரிக்கெட் போட்டி ரத்து!
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டத்தின் எதிரொலியாக கிரிக்கெட் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாஜக மத்திய அரசு இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்ததால் அசாம் மற்றும் திரிபுரா பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதனால் அசாம் மற்றும் திரிபுராவில் நடைபெறவிருந்த ராஞ்சி கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போட்டிகள் மீண்டும் நடைபெற இருக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்