பயமே இல்லாத ஆட்டம் – இந்திய அணிக்கு கங்குலி பாராட்டு !

Sourav Ganguly
Last Modified வியாழன், 12 டிசம்பர் 2019 (14:31 IST)
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக நேற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி 20 போட்டியை இந்திய அணி அனாசயமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆரம்பத்தில் ரோஹித்தும் இடையில் ராகுலும் இறுதியில் கோலியும் என மாறி மாறி வெளுத்துக் கட்டியதேக் காரணம்.

இந்த போட்டி குறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘எனக்கு இந்த வெற்றி ஆச்சர்யமளிக்கவில்லை. டி 20 போட்டிகளில் மற்ற அணிகள் அச்சமின்றி அடித்து ஆடுவதைப் போல இந்திய அணியும் அடித்து ஆடியது. இந்திய அணியில் எல்லோரும் தங்கள் இடத்தைப் பற்றி கவலைப்படாமல் வெற்றிக்காகவே விளையாடுகின்றனர். வாழ்த்துகள் இந்தியா’ எனத் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :