இந்திய அணி அபார வெற்றி: தொடரையும் வென்றது

Last Updated: வியாழன், 12 டிசம்பர் 2019 (06:06 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் அதிரடி பேட்டிங்கால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது

இந்த நிலையில் 241 என்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய பவுலர்களின் அபாரமான பந்து வீச்சினால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்திய தீவுகள் அணி 173 ரன்களை மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றதுடன் தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கத
சாகர், புவனேஷ் குமார், முகமது சமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய நால்வரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டி தொடர் முடிவடைந்ததை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 15ம் தேதி முதல் தொடங்குகிறது என்பதும் டிசம்பர் 15 டிசம்பர் 18 மற்றும் டிசம்பர் 22 ஆகிய மூன்று ஒருநாள் போட்டிகள் சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :