தொடர்புடைய செய்திகள்
- காங்கிரசுக்கு திமுக சொன்ன தொகுதியின் எண்ணிக்கை.. தமிழகத்திலும் உடைகிறதா இந்தியா கூட்டணி?
- நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத சூழல்- டிடிவி. தினகரன்
- அஸ்வின், ஜடேஜா எனக்கு ஒருவிதத்தில் உதவினர்… இங்கிலாந்து ஸ்பின்னர் டாம் ஹார்ட்லி கருத்து!
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. இந்தியா போராடி தோல்வி..!
- ரோஹித் ஷர்மாவிடம் இருந்து அதைக் கற்றுக் கொண்டேன்… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்!
பாஸ்பால் கிரிக்கெட்டுக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் – டிராவிட் கருத்து!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணைக்கு 231 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி முதலாவது இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 420 ரன்கள் எடுத்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணிக்கு 231 இலக்காக கொடுக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் காலைவாரி சொதப்பினர். இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “ இங்கிலாந்து வீரர்கள் பின்பற்றும் பாஸ்பால் அனுகுமுறைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும். அதற்கு ஏற்றவாறு திட்டங்களையும் வியூகங்களையும் வகுப்போம்” எனக் கூறியுள்ளார்.